• Fri. Mar 29th, 2024

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

நம்பியூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 யூனிட் ரத்த தானம் கோபிசெட்டிபாளையம் அரசு ரத்த வங்கிக்கு தானமாக வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பகுதியில் நம்பியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அரசு கலைக் கல்லூரியில் கோபி அரசு மருத்துவமனை மற்றும் அரசு கலைக் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கெட்டிசெவியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யாழினி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசங்கர் முகாமினை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 50 யூனிட் ரத்ததானம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பொறுப்பு தமிழ்மணி, நம்பியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரங்கசாமி,ரத்ததான ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் அரசு கலைக்கல்லூரி செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *