• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஈரோடு தேர்தலில் -ஓபிஎஸ் நாளை பிரச்சாரத்தை துவங்குகிறார்

ByA.Tamilselvan

Feb 2, 2023

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது..ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தீவிர உறுப்பினர். தீவிர விசுவாசி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். அவரை ஆதரித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி ஆகியோர் ஏற்கனவே பிரசாரம் செய்து வருகிறார்கள். நாளை முதல் நானும் (ஓ.பன்னீர் செல்வம்) கழக நிர்வாகிகளும் செந்தில்முருகனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவோம். இந்த தேர்தலில் எங்களுடைய நிலையை ஜனநாயக பண்பை ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்வோம். தீர்ப்பளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் வாக்காளர்களிடம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.