புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்குகள் சேகரித்து வருகிறார். தேர்தல் பணியின் வாக்கு சேகரிப்பு நாளை நிறைவடைய இருக்கும் நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.

இந்நிலையில் திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதிகளில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிக்கும் போது புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் கஞ்சா அதிகமாக புழங்குகிறது. இது இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றாக தெரியும். அவர் நினைத்திருந்தால் கஞ்சாவை ஒழித்திருக்க முடியும். அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். மாநகராட்சி பகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லை. அவர் நினைத்திருந்தால் நான்கு கோடி ரூபாய்க்கு 10 லாரிகள் வாங்கி இருக்க முடியும்.

அந்த லாரிகளில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்தால் பணியாட்களை நியமித்து விட முடியும். அதன் மூலம் நாள்தோறும் இருபது லாரி தண்ணீர் வழங்க முடியும். அதையெல்லாம் செய்யவில்லை.
கருவேப்பிலான் கேட்பகுதியில் ஒரு மேம்பாலமும் திருவப்பூர் பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைத்து தருகிறேன் என்று சொன்னார் ஆனால் எதுவும் செய்யவில்லை. புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சிக்கு இணையாக வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகளில் மிகவும் மோசமான மாநகராட்சியாக புதுக்கோட்டை இருக்கிறது.

நூறாண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு வடிவமைத்து கட்டப்பட்ட இந்த புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இப்போது வழங்க முடியவில்லை. இப்போது குடிநீரும் சாக்கடை நீரும் ஒன்றாக கலந்து வருகிறது அந்த அளவுக்கு மோசமான மாநகராட்சியாக இருக்கிறது என்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் இப்போதுள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவில்லை.
ஆனால் ராமச்சந்திரன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு போகும் போது குரல் ஓங்கி ஒலிக்கும் புதுக்கோட்டை மக்களுக்காக. இங்குள்ள மருத்துவ கல்லூரி முதல் பள்ளிகளின் வளர்ச்சி வரை செய்தது அதிமுக அரசு. இங்குள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் தந்ததும் அதிமுக அரசுதான். மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் ஆட்சிக்கு வரும்போது இன்னும் நிறைய செய்வோம் என்று பேசினார். இவர்களது பேச்சைக் கேட்க அதிமுக பாஜக தொண்டர்கள் ஏராளமான குழுமியிருந்தனர்.



