• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு..,

BySeenu

Apr 20, 2026

கோவை தெற்கு தொகுதி தேஜ கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதி முழுக்க கரூரில் இருந்து வந்த 2 ஆயிரம் ரவுடிகள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்றும் வாக்காளர்களுக்கு மிரட்டி பணம் கொடுப்பதாக எங்களுக்கு புகார் வந்தது என்றார்.

நாங்கள் பார்க்க போன போது, எங்க கட்சிக்காரர்களை கடித்து வைத்துள்ளார்கள் என்றும் அவர்கள் என்ன மிருகசாதியா? அவ்வளவு பசியா? இந்த தொகுதியில்
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என்றார். நேற்று 8 இடங்களில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், இன்று பரிசுப்பொருட்கள் தர உள்ளார்கள், என கூறிய அவர் மக்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பரா மிலிட்டரி வைத்து தேர்தலை நடத்த வேண்டுமெனவும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். இதே சூழல் இருந்தால் உங்களிடம் பணம் வங்காதவர்கள் எப்படி ஓட்டு போட வருவார்கள்? இது என்ன வியாபாரமா? மற்ற 233 தொகுதிகளில் இந்த மாதிரி நடக்கவில்லை என்றார்.

மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் பறக்கும் படையினர் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். காவல்துறையினர் இன்னும் தி.மு.க-விற்கு கைப்பாவையாக செயல்படுகிறது என கூறித அவர் இந்த போலீசை வைத்து தேர்தல் நடத்தினால், நியாயமாக நடக்காது என்றார். காவல்துறை ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி கன்ட்ரோலில் இல்லை, தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றார். பணப்பட்டுவாடா செய்தவர்களை பிடித்து தந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணம் தந்தால் பிடியுங்கள், தி.மு.க.வினர் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை தப்பிக்க வைப்பதற்காக பறக்கும் படை தாமதமாக வருகிறது என்றார். மேலும் செய்தியாளர்களும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் பணப்பட்டுவாடாவை எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை என வருத்தத்தையும் ஆதங்கத்தையும் சற்று கடுமையான தெரிவித்தார்.