



மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 51வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

மேலும் முளைப்பாரி எடுத்து நான்கு வீதிகளும் உலா வந்து மீண்டும் அம்மன் அருகே முளைப்பாரி வைக்கப்பட்டது. இதை நாளை மாலை முளைப்பாரி மீண்டும் எடுக்கப்பட்டு ஊரணி கரையில் கரைக்கப்படும். இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

இப்போது பூக்குழி காண அல்லது சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்தும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மதுரை டவுன் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

