



மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கிராமம் அமைந்துள்ளது.மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த கன்மாயில் பொதுப்பணித்துறை மூலமாக தற்போது ரூபாய் 17.5 கோடி திட்ட மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தப்படும் பணியோடு சேர்ந்து பக்கவாட்டில் கற்கள் அமைக்கும் பணிகளுக்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நடுமடையில் இருந்து தண்ணீர் விவசாய பணிகளுக்காக செல்லக்கூடிய பழமையான கால்வாய் பகுதிகளில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாகவும் ஆக்கிரமிப்பின் காரணமாக துரைசாமி நகர் பகுதியில் செல்லக்கூடிய வாய்க்கால் பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லக்கூடிய ஒரு அவல நிலை இருந்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியுடைய சட்டமன்ற உறுப்பினர் என்கின்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கோரிக்கை மனு வழங்கியிருந்த நிலையில்

இன்று மதுரை பைபாஸ் சாலை பகுதியில் இருக்கக்கூடிய துரைச்சாமி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்
துரைச்சாமி நகர் பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளுடைய நலச் சங்கத்தினர் சார்பாக அந்த பகுதியுடைய வரைபடம் மற்றும் கால்வாய் இருந்த பகுதி தற்போது ஆக்கிரமிப்பு உள்ள பகுதி உள்ளிட்டவைகள் குறித்து முன்னாள் அமைச்சர் இடம் எடுத்துக் கூறப்பட்டது
தொடர்ந்து துரைசாமி நகரின் பின்புறத்தில் வயல்வெளிகளில் தண்ணீர் போக முடியாமல் குடியிருப்புகளுக்கு அருகிலேயே தேங்கி நிற்கும் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்களிடம் விவரங்களை கேட்டுக் கொண்டார்
அதனைத் தொடர்ந்து மாடக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய சத்தியமூர்த்தி நகர் வழியாக சென்று நடுமுடைய வாய்க்கால் தண்ணீர் செல்லக்கூடிய பகுதி முழுவதையும் ஆய்வு மேற்கொண்டார்
தண்ணீர் செல்லக்கூடிய பகுதிகள் முழுவதும் குப்பைகளும் கழிவுநீர்களும் கலக்கக் கூடிய அவல நிலை இருப்பதாக பகுதி மக்களும் கிராமம் மரபு வழி மரியாதைதாரர்களும் தெரிவித்தனர்
அதனைத் தொடர்ந்து மாடக்குளம் கண்மாய்க்கு சென்றார்
கண்மாய் கரை மீது ஏறி அங்கே நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை உடைய பணிகள் குறித்து பார்வையிட்டபோது கட்சியினர் தற்போது இந்த பணிகள் நடைபெறுவது பெயரளவுக்கு தான் என்றும் இதனால் கரைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அவரிடத்தில் தெரிவித்தனர்
தொடர்ந்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக நடக்கும் பணிகள் குறித்து விபரங்களை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மூன்று மடைகளில் ஒன்று நடுமடை நடுமடை வழியாகத்தான் மாடக்குளம் பகுதியை கடைந்து துரைசாமி நகர் பலியாக தண்ணீர் செல்வது வழக்கம்.

இந்த தண்ணீர் செல்லக்கூடிய பகுதிகளில் தான் தற்போது ஆக்கிரமிப்புகள் இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கக் கூடிய ஒரு நிலை இருந்து வருவதால் பெரும் ஆபத்து ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாடக்குளம் பகுதி மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடத்திலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்திலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேசுகிறேன் என்றும்
இந்த வாய்க்கால் தொடர்பாக மாடக்குளம் பகுதி மக்களுடைய கோரிக்கை மனு ஏற்கனவே மாநகராட்சி ஆணையாளர்களிடமும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

