• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வெண்டைக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்-1ஃ4கிலோ,
தக்காளி-3நறுக்கியது,
மல்லி(மல்லிஇலை அல்ல)-1 ஸ்பூன்,
மிளகாய் வற்றல்-4
பூண்டு-2பல்
மஞ்சள் தூள்-1ஃ2ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையானஅளவு,

செய்முறை:
வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைத்து கொண்டு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி ஆற விடவும். மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மல்லி, மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும் (கருக விடாமல் வறுக்கவும்), இதையும் சற்று நேரம் ஆறிய பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொண்டு இதனோடு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய், தக்காளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இந்த கிரேவி இட்லி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.