செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் மோடியின் படம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறுவது தொடர்பான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இன்று காலை விளம்பர பேனர்களில் மோடி புகைப்படம் இல்லை என பாஜகவினர் சிலர் அவரின் புகைப்படத்தை பேனர்களில் வைத்து ஒட்டிச்சென்றனர்.
இந்நிலையில் தற்போது ஒட்டப்பட்ட மோடியின் புகைப்படத்தை கருப்பு மை கொண்டு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அழித்து வருகின்றனர். கருப்பை மை கொண்டு அழிக்கும் வீடியோ தற்போது வீடியோ வைரல் ஆகிவருகிறது.