தென்காசி மற்றும் மேலகரத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி அமைச்சர் செல்வராஜ் கட்டிடங்கள், உணவு முறைகள், பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், மாணவிகளின் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி நகர செயலாளர் சாதீர், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
