• Tue. Oct 3rd, 2023

வீட்டு காவலில் மெகபூபா முப்தி

ByA.Tamilselvan

Oct 5, 2022

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *