

குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தூய்மைபணியாளர்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி மன்றதலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன்.குச்சனூர் பேரூராட்சி துய்மைபணியாளர்களின் தினசரி வருகை பதிவேடு மற்றும் வேலை ஓதுக்கீடுசெய்யும் பணி செய்கிறார்.ஆனால் வருகை பதிவேடு எடுக்கும் பணி மற்றும் வேலை ஒதுக்கீடு பணி அலுவலக பணியாளர்களுடையது. ஆனால் இவர் போரூராட்சி நிர்வாகத்தை கையில்எடுத்துக்கொண்டு ஆடா வடியாக செயல்படுகிறார்.பணி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவதாகவும்,மேலும் தூய்மை பணியாளர்களை மிரட்டுவதாகவும் இவர் மீதுகுற்றச்சாட்டு எழுந்துள்ளது.பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லாத நிலையே தொடர்கிறது. குச்சனூர் பேரூராட்சி தூய்மைபணியாளர்கள் பேரூராட்சி மன்றதலைவர்ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மாவட்ட நிர்வாக்திடம் கோரிக்கைவைத்துள்ளனர்..
