

தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவு
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் சேர்ந்தவர் பெரியகருப்பதேவர் மகன் முருகன் என்ற கீரிப்பட்டி முருகன் வயது 53.இவர் கஞ்சா கடத்தி வைத்திருப்பதா கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் படி கீரிப்பட்டி முருகனின் தென்னந்தோப்பில் 220கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக மயிலாடும்பாறை காவல் நிலையித்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கீரிப்பட்டி முருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.இவ்வழக்கானது புலன்விசாரணை செய்யப்பட்டுகுற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.மதுரை நீதிமன்ற விசாரணைக்குபின் 10 வருட கடுக்காவல்தண்டனையும் ரூ1,00000 அபராதமும் தண்டனையாக வழங்கப்பட்டது
மேலும் காவல்துறையினர் தெரிவிக்கும் போது இந்நிலையில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க்,,திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் ரூபேஸ்குமார்மீனா ஆகியோர் மேற்கண்ட கஞ்சாவியாபாரியின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டனர்.இந்த உத்தவின் பேரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின்உமேஷ் மேற்பார்வையில் ஆண்டிபட்டிஉட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராமலிங்கம் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் கஞ்சாவியாபாரி கீரிப்பட்டி முருகன் அசையும்,அசையா சொத்துக்கள் வாகனங்கள் ,வங்கி கணக்குள் ,உறவினர்களின் பேரில் உள்ள சொத்துவிபரங்கள் ஆகியவை விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுது .அதன்பேரில் கீரிப்பட்டி முருகனின் ரூ22,50000 மதிப்புள்ள சொத்துக்கள்முடக்கப்பட்டது.
