


பெரம்பலூர் மாவட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 3.930 kg குட்கா பொருட்களை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் சரகத்திற்குட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் குமார் (75) த/பெ ராஜி, வடக்கு தெரு, கள்ளப்பட்டி. பெரம்பலூர் என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில், அரும்பாவூர் உதவி ஆய்வாளர் சிற்றரசன் தலைமையிலான குழுவினர் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து விமல் பாக்கு (25 பண்டல் – 2.650 kg) 2. V1-பான் மசாலா (28 பண்டல் – 680 கிராம்) 3.ஹான்ஸ் (2 பண்டல் – 600 கிராம்) மொத்தம் – 3.930 கிலோ எடையுள்ள சுமார் ரூ.10,300 மதிப்புள்ள ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


