• Wed. Apr 23rd, 2025

பெட்ரோல் பங்கில் மோசடி செய்த நபர் கைது

ByT.Vasanthkumar

Mar 20, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் முறைகேடாக சுமார் 28,46,764 ரூபாயை நம்பிக்கை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம் ராஜாஜி நகரை சேர்ந்த மருதமுத்து மகன் கஜேந்திரன் (61) என்பவர் உள்ள சரவண பாலாஜி ஏஜென்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில் முதுநிலை மேலாளராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் பணி செய்து வரும் சதீஷ் (37) த/பெ சன்னாசி கிளியநல்லூர் கிராமம், மன்னச்சநல்லூர் வட்டம் திருச்சி மாவட்டம். என்பவர் மேற்படி பெட்ரோல் பங்கில் முறைகேடாக கணக்கில் காட்டப்படாமல் 28,46,764 ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக கஜேந்திரன் மாவட்ட குற்ற பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா இன்று 20.03.2025 -ம் தேதி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.