



மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி பொதும்பு கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம், மங்கல இசையுடன் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் பொதும்பு மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பொதும்பு கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

