



மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பழனி தண்டாயுதபாணி கோவில் வீட்டில் விபூதியில் ருத்ராட்சம் உத்தரவு வழங்கும் மகா பெருவிழா நடைபெற்றது.

முருகன் சாமியாடிகள் வகையறரக்கள் பழனியாண்டி, பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியநாதன், திருக்குமரன், முருகன், விஜய கார்த்திக், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், இடும்பன் சாமி வகையறாக்கள் மற்றும் லாட சன்னியாசி சாமி வகையறாக்கள் உட்பட கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாமியாடிகளிடம் அருள்வாக்கு பெற்றனர்.

தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,

