நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய சிந்தனை பேரவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தடை விதித்துள்ள தமிழக அரசு காதுகளுக்கு எங்கள் கோரிக்கை எட்டவும், இந்துக்கள் பூரண சுதந்திரத்துடன் செயல்பட அருள்புரிய வேண்டியும் ஆபத்து காத்த விநாயகருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு, இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத்தலைவர் செந்தில் கிருஷ்ணன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு விண்ணப்பம் வைத்து பூஜைகள் நடத்தினர். அப்போது தேசிய சிந்தனைப் பேரவை தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்ததாவது: விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பொது வெளியில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே இந்துக்களுக்கு ஆதரவாக முதல்வர் இல்லை என்பதை தெரிந்த நாங்கள் இன்று எங்கள் மூலம் முதல்வரான ஆபத்து காத்த விநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும், தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்து விரோத செயல் என்றும் தெரிவித்தார்.