மதுரை தி.மு.க. மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் பி ஏ வரலாறு எம் ஏ.Lib science படித்த பட்டதாரி. குடும்ப பெண்ணாக இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தற்போது மதுரை மேயர் பதவிக்கு திமுக தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 57-வது வார்டில் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தவர் இந்திராணி பொன்வசந்த்.இந்திராணி பொன்வசந்த், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட மாநகராட்சி 57-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த வார்டில் மொத்தம் 12வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் இந்திராணி 6 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்இழந்தனர். 2-ம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் 958 வாக்குகள் பெற்று இருந்தார். இந்திராணி 5 ஆயிரத்து 893 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
கணவர் பொன் வசந்த் குறித்த தகவல்கள்
பொன்.வசந்த், மதுரை மாவட்டம் வாலாந்தூர் ஆரியப்பட்டியை சேர்ந்தவர். வக்கீலாகவும், விவசாயமும் செய்து வருகிறார். தி.மு.க. ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.கடந்த 1993-ம் ஆண்டு கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினராக இருக்கிறார். 2001-ம் ஆண்டு முதல் மாவட்ட மாணரவணி துணை அமைப்பாளராகவும், 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு முதல் ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.இவர் 25-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் தேர்தல்பொறுப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் அனைத்திலும் கலந்து கொண்டு இருக்கிறார். பொன்.வசந்த், தந்தையும் தி.மு.க.வின் தீவிர உறுப்பினர் ஆவார். இவர்களது குடும்பம் தி.மு.க. பாராம்பரியம் கொண்டது.