• Wed. Apr 23rd, 2025

புத்தாண்டில் குறைந்த தங்கம் விலை

Byவிஷா

Apr 14, 2025

இன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 8,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 70,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.