• Tue. Apr 22nd, 2025

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்

Byவிஷா

Apr 16, 2025

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சற்றே குறைந்தது. இந்நிலையில் இன்று (ஏப்.16) மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8515-க்கும், பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.70,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.