



தங்கம் விலை ஒரு சவரன் ரூ.70ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதலீட்டாளர்களால், பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டு, அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை ஏப்.09 ஆம் தேதி முதல் தடாலடியாக உயரத் தொடங்கியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.4,260 உயர்ந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ. 8,775 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 ஆக விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.4,460 உயர்ந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவது நகைப்பிரியர்களை கவலையடைய செய்துள்ளது.

