திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நிற்பதுபோல் விநாயகர் சிலையினை தத்துரூவமாக வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜெயிலர். இந்த படமானது வருகின்ற 2023 பொங்கலில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருவதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூளவாடி பகுதியை சேர்ந்த ரஜினி ரஞ்சித் ஜெயிலர் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். அதே போல் இந்த சிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
திருப்பூரில் ரஜினி ஸ்டைலில் குட்டி விநாயகர்..!
