• Thu. Dec 12th, 2024

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .அதற்கு முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம். செல்வம் தலைமையில் அமைப்பினர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு மொக்க ராஜ் ,இளைஞர் அணி மனோஜ் குமார் ,ஒன்றிய செயலாளர் கனகராஜ் ,ஆட்டோ முன்னணி ராஜா, ராஜகோபால், ஜெயபால், வேலன் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.