• Sun. Jul 21st, 2024

லைஃப்ஸ்டைல்

Byவிஷா

Mar 2, 2023

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேழ்வரகு இட்லி:

இன்று இருக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. இதனால் எலும்பு தேய்மானம் என்பது மிக விரைவாகவே வந்து விடுகிறது. குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் கால்சியம் குறைபாட்டை நீக்கக்கூடிய அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. 
நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பதை போல, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய்க்கு முதியவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – ஒரு கப், இட்லி அரிசி – அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. –

செய்முறை விளக்கம்:

சுவையான கேழ்வரகு இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் எந்த கப்பில் கேழ்வரகு எடுத்தீர்களோ, அதே கப் அளவிற்கு இட்லி அரிசி அரை கப் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல உளுந்து அரை கப் அளவிற்கு சேர்த்து, வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு நன்கு நாலைந்து முறை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். ஐந்து மணி நேரத்திற்கு பிறகு எல்லா பொருட்களும் நன்கு ஊறி இருக்கும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு அரைக்க பெரிய மிக்ஸி ஜார் எடுப்பது நல்லது அல்லது நீங்கள் வெட் கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். மாவை நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் சேர்த்து விட வேண்டாம். அதே போல கெட்டியாகவும் அரைத்து விடக்கூடாது.
பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு மாவு புளித்து நுரைத்து இருக்கும். இப்போது ஒரு கரண்டியை வைத்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல ஊற்றி வேக வையுங்கள். பொதுவாக இட்லி அவிக்க ஏழு நிமிடம் போதும்! ஆனால் இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் 15 நிமிடம் வரை நன்கு அவிக்க வேண்டும். அப்போது தான் மெத்தென்று அவிந்து வரும்.
இந்த சுவையான ராகி இட்லியுடன் தொட்டுக் கொள்ள காரசாரமான காரச் சட்னி அல்லது வெங்காய சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிடலாம். இதே மாதிரி தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து தோசை வார்த்தால் இன்னும் சூப்பராக மொறு மொறு என்று ராகி தோசை நமக்கு கிடைக்கும். ஆரோக்கியம் அள்ளித்தரும் இந்த ராகி இட்லி, தோசையை அடிக்கடி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இதில் ராகிக்கு பதிலாக வரகு சேர்த்தும் செய்யலாம்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
ஜூம்பா நடனமாடி, ஏராம்பா ஃபிட்னஸ் பற்றி விழிப்புணர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *