



வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளளதால், ஒரு சவரன்
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.66, 480 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் 21-ம் தேதி பவுனுக்கு ரூ.320-ம், 22-ம் தேதி ரூ.320-ம், 24-ம் தேதி ரூ.120-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், 25-ம் தேதி ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்தது. இதன்மூலம், 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது. இதனால் தங்கம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஆறுதலை தந்தது. ஆனால் விலை குறைவு நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை இன்று (மார்ச் 31) சென்னையில் 22 கேரட் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இதன் மூலம் மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வருகிறது.

