• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரியில் சட்ட விழிப்புணர்வு வாகன பேரணி…

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உச்சநீதி மன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் கலந்து கொண்ட புதிய வடிவிலான சட்ட சேவை சிறப்பு முகாமையும், சட்ட விழிப்புணர்வு குறித்த வாகன பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் கன்னியாகுமரியில் புதிய வடிவிலான சட்ட சேவை முகாமை விளக்கேற்றி வைத்ததோடு, சட்ட விழிப்புணா்வு வாகனத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இதில், அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று தங்களது துறையைச் சாா்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் நோக்குடன் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.

மேலும் சட்டம் சாா்ந்த மற்றும் சட்டம் சாராத பிற துறைகளின் மனுக்களையும் அந்தந்த துறை மூலம் முகாமிலேயே தீா்வு காண வழிவகை காண முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்தி கொள்ள சட்ட துறை சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது. இந்த முகாமில் வழக்கறிஞர்கள் வருவாய் துறை வேளாண்மை துறை என பல்வேறு அரசு துறைகளை சார்ந்தவர்களும் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *