• Fri. Mar 29th, 2024

தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய மெடிக்கல் சீட்டுளை வேண்டாம் என்று சொல்லலாமா? – அண்ணாமலை கேள்வி

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாகர்கோவிலில் சமுதாய பெரியோர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமுதாய தலைவர்கள் சந்திப்பு நடந்தது. அதில் முக்கியமாக இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி கேட்டார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் 106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்கள். அதற்கான நிலம் எடுப்பதுதான் பிரச்னை. இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்காக ஆசாரிப்பள்லத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பயன் கிடைக்கும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் இருக்கும் பார்களை நாளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்குள் இருக்கும் 21 தீர்த்த கிணறுகள திறக்காமல் இருக்கிறார்கள். தீர்த்த கிணறை நம்பி 600 குடும்பங்கள் இருக்கிறார்கள். எனவே தீர்த்தங்களை திறக்க நடவடிக்க எடுக்க வேண்டும். அதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு பாக்கியம் கிடைக்கும்.

நாளை 1 -ம் வகுபு முதல் 8 வரை பள்ளிகள் திறக்கிறது. குழந்தைகள் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும். எனவே அரசு பஸ்களை அதிகப்படுத்த வேண்டும். பள்ளிக்கு போவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளோம். 1956 நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 2018 முதல் நவம்பர் 1-முதல் தமிழ்நாட்டு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2020 நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு என அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வாழ்த்து போட்டிருந்தார். இந்த ஆண்டு ஏன் மாற்ற வேண்டும். ஜூலை 18 முக்கியமான நாள்தான், அன்று வேறு ஏதாவது முக்கிய நாளாக அறிவிக்கலாம். எதற்காக குழப்பம் விளைவிக்க வேண்டும். நவம்பர் 1-தான் தமிழ்நாட்டு நாளாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீடுதேடி கல்வி என்பது வரவேற்க வேண்டிய விஷயம். இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்களை திரும்பக் கொண்டுவருவதுதான், புதிய கல்விக்கொள்கை எனக் கூறுகிறோம்.

இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 82 டாலர். 2020 ஜூன் மாத காலண்டையும், 2021 ஜீன் காலாண்டையும் கணக்கிடுன்போது இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலின் அளவு அதிகரித்துள்ளது. எல்லா ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் ஒரு விதிமுறைப்படிதான் போகிறார்கள். மத்திய அரசை பொறுத்தவரை எண்ணெய் நிறுவனங்கள் லாபமாக இருக்க வேண்டும் என விலை நிர்ணயிக்கவில்லை. பெட்ரோல் மாநில மத்திய அரசுகளுக்கு அதிக வருவாய் தரக்கூடியதாக இருக்கிறது. பெட்ரோல் வருவாயை வைத்துதான் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் போடுகிறது. எல்லாவற்றையும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும் என்றோம். முதல் ஐந்து வருடத்துக்கு மட்டும் சில பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றனர். அந்த ஐந்து ஆண்டு 2022 ஜூன் 31-ல் முடிகிறது. ஜூலை 1-முதல் எல்லாவற்றையும் ஜி.எஸ்.டி-க்கு கொண்டுவர முயற்சிப்போம்.

கடந்த ஆண்டு 19,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு பெட்ரோல் மூலம் வருவாய் வந்துள்ளது. அதுபோல மத்திய அரசுக்கும் வருவாய் வந்துள்ளது. தமிழ்நாட்டில் குறைத்தது போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் குறைக்கப்படுள்ளது. பெட்ரோலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவதன் மூலம்தான் முழுமையான தீர்வு ஏற்படுத்த முடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் கொண்டுவந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த மாநில அரசு பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டுவந்த திட்டங்களை செய்தாலே கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்குச் செல்லும். மதுரை எய்ம்ஸ்-ல் இடம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இருந்தது. எய்ம்ஸ்-ல் 150 மெடிக்கல் சீட் மத்திய அரசு கொண்டு வருவதாக சொன்னது. மாநில அரசு வேண்டாம் என்கிறது. தனியார் ஆஸ்பத்திரி, ஜிப்மர் போன்றவற்றுக்கு பிரித்துக்கொடுக்கலாம் என்று சொன்னால் அமைச்சர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய மெடிக்கல் சீட்டுளை வேண்டாம் என்று சொல்லலாமா? தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால் அதை அரசியல் ஆக்கக்கூடாது.

பட்டாசைப் பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட் பசுமை பட்டாசு வேண்டும் என கூறியுள்ளது. எனவே எல்லா மாநில அரசுகளுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். சிவகாசியில் 50 சதவீதம் விற்பனை குறைந்ததாக சொல்கிறார்கள். மாசு ஏற்படும் என சும்மா சொல்கிறார்கள். அமெரிக்காவில் ஜூலை 4-ல் எவ்வளவு பட்டாசும் வெடிக்கலாம், ஆதிரேலியா சிட்னி துறைமுகத்திலும் விதிவிலக்கு கொடுக்கிறார்கள். இந்தியாவில் 2000 வருடமாக தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்க வேண்டும். பண்டிகை நம் பாரம்பர்யம், கலாச்சாரம் எனவே தைரியமாக மக்கள் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும். அதை எட்டரை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும்.

2 ஜி விசயத்தில் வினோத் ராய் மன்னிப்பு கேட்கவில்லை. மன்மோகன்சிங்கை சஞ்செய் நிருபம் இந்த விஷயத்தில் நிர்பந்தம் செய்தார் எனச் சொன்னதற்காக மட்டுமே வருத்தம் தெரிவித்துள்ளார். தி.மு.க அரசு எங்கள் தலைவர்களை கங்கணம் கட்டி கைது செய்திருக்கிறரகள். பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கருத்துப்போட்டால் குண்டாஸ் போடுகிறார்கள். பெண் நிர்வாகிகள் பற்றி பதிவுபோட்ட தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை இல்லை. பெண் நிர்வாகி ஒருவரை காவல்துறை கைது செய்யும் போது தள்ளிவிட்டார்கள். இதுபற்றி எல்லாம் தமிழக போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுபற்றி நவம்பர் 2-ல் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர். அந்த புகாருக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *