• Thu. Dec 12th, 2024

தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி மகிழ்ந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி….

இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது முகப்புப் பக்கத்தையும் அவர் மாற்றினார்.

இதேபோல், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தேசியக் கொடி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை அதிமுக சார்பாக சிறப்பாக கொண்டாடபடுகின்றது. இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டில் இன்று காலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மண டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன். சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.