உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் திருநெல்வேலி முறுக்கு, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மேக்ரோன், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என மக்கள் விரும்பி உண்ணும் உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவுகள் எவை, சாப்பிடக் கூடாதவை எவை என அனைத்தும் இங்கு விளக்கப்படுகிறது.