

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் கொரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் செய்தியில், ‘அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், இந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.கொரோனா பரவல் காரணமாக, சுதந்திர தினத்தன்று மிகப்பெரிய அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்.
மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்போர் அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
