• Thu. Mar 27th, 2025

பேரழகா..,

கவிதை உனக்கும்
கவிதை எழுதுவது எனக்கும்
பிடிக்குமே பேரழகா

இன்னுமொரு கவிதை
வரிகளுக்கு
இங்கு
கண்ணாடி வளைகள்
காத்திருக்கு

கருக்கல் வரைக்கும்
காக்க வெச்சிடாம

சுருக்கா வந்திடு அழகா

கனா ஒன்னு
சேவல் கூவ கலைஞ்சிரும் தானே..!

கவிஞர் மேகலைமணியன்