
பேரழகனே..,
பாடாய் படுத்துகின்றாய்
நான் படும்பாட்டை
பார்த்துப் பார்த்து ரசிக்கின்றாய்….
உனக்கென்ன நேருக்கு நேர்
விழி பார்த்து
ஒரு சிரிப்பு சிரிக்கிறாய்
ஈரக்கொலை நடுங்க நானல்லவா
இம்சிக்கப் படுகிறேன்….
போடா பேரழகா
உன்னைக் காணும் போதெல்லாம்
நான் காணாமல் போய்விடுகின்றேன்
இதென்னடா அதிசயமாக இருக்கிறது
என் வானத்து நட்சத்திரங்கள்
உன் ஒற்றைப் பார்வையிலேயே
உதிர்ந்து விட்டது உன் காலடியில்….
புலி அடிக்க வந்தாலும் முறம் எடுத்து
விரட்டிடும்பலமுள்ள தமிழச்சி நான்
உன் விழி அடித்து வீழ்ந்து விட்டேனே….
சரி போடா
சங்கடம் ஒன்றுமில்லை
நான் விழுந்தது
உன் இதயத்தில் என்பதால்

கவிஞர் மேகலைமணியன்
