• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என தொண்டர்கள் கோஷங்களால் பரபரப்பு..,

BySeenu

Jun 2, 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் எழுப்பிய கோஷங்களால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது நிகழ்வுகளை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னை புறப்பட்டார்.இதனையொட்டி, அவரை வரவேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கோவை விமான நிலையத்தின் முன்பாகக் குவிந்திருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்குள் வருவதற்கு முன்பாகவே, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக உற்சாகத்துடன் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.குறிப்பாக, காசுக்கு விலை போக மாட்டோம்”, நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி” என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு குவிந்திருந்த தொண்டர்கள் ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஆரவாரத்துடன் சென்னைக்கு வழி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.