• Fri. Mar 24th, 2023

தேவையான பொருட்கள்:
கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, பின்பு இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *