• Thu. Dec 7th, 2023

கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் – நீதிபதி அதிரடி உத்தரவு

ByA.Tamilselvan

Aug 1, 2022

கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அதாவது கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.

பள்ளியின் வாகனங்கள், காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டது. இதனால் அங்கு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ அடிப்படையில் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக இதுவரை 360க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக 108 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடந்த 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காக இன்று அவர்களைகாணொலி காட்சி மூலம் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்னால் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி, அவர்களுக்கு நீதிமன்ற காவலை வருகிற 12ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *