அரசு இப்பணிகளை மேற்கொள்ளாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் நிதி திரட்டி ரூ. 1 இலட்சம் செலவில் தெற்கு மடை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை திறக்க முடியாமல் மாற்றுப்பாதை மறுகால் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தெற்கு மடையினை சரி செய்யாமல் இருந்த விடியா தி.மு.க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அரசு இப்பணிகளை மேற்கொள்ளாததால் தாழக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் நிதி திரட்டி ரூ. 1 இலட்சம் செலவில் தெற்கு மடை சரி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை இப்பணிகளுக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினார்.
ஒவ்வொரு பகுதிகளிலும் கால்வாய்கள், சாணல்கள், குளங்கள் இவற்றை முறையாக தூர் வாரி, இதன் வாயிலாக தண்ணீர் விவசாயிகளுக்கு எவ்வித சிரமமின்றி தாராளமாக கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவசாயிகள் நலனில் விடியா தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்தே அலட்சியம் செய்து வருகிறது. குறிப்பாக தாழக்குடி வீரகேரளப்பநேரி குளத்திலிருந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தெற்கு மடை வழியாக சென்று வந்தது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடை திறக்க முடியாமல் இம்மடை வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாற்றுப்பாதையில் மறுகால் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலை ஏற்பட்ட உடனேயே அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், நீர்வளத்துறையிடமும் வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை திறந்து சரி செய்திட உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சார்பில் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை சரி செய்ய தாழக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன் வந்து இணைந்து ரூ. 1 இலட்சம் நிதி திரட்டி இப்பணிகளை செய்து வருகிறார்கள்.
இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் இன்று (26-05-2025) நேரில் பார்வையிட்டு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை இப்பணிகளுக்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,விவசாயிகளின் நலன் கருதி வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை அரசு கடந்த 4 ஆண்டுகளாக சரி செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பாக வீரகேரளப்பநேரி குளத்திலிருந்து வருகின்ற தண்ணீர் நேரடியாக தெற்கு மடை வழியாக பாசனத்திற்கு சென்று வந்தது. இதன் வாயிலாக தாழக்குடி பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வந்தன.
அதன் பின் தெற்கு மடையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு விவசாயிகள் மாற்றுப்பாதையில் மறுகால் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு மடையை திறப்பதற்கு எந்தவித நடவடிக்கையினையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தாழக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடி முடிவெடுத்து இப்பணியினை சிறப்புற மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது மறுகால் ஒடையினை சீர் செய்து, தண்ணீர் செல்லமுடியாத நிலைக்கு காரணமாக அடைப்புகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று தீவிரமாக வருகிறது. விடியா தி.மு.க அரசு விவசாயிகளை ஏமாற்றும் அரசாக விளங்கி வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரோகிணி, தாழக்குடி முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் அய்யப்பன், விவசாயிகள் ஒவையார், குமார், அழகப்பன் உட்பட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்
தாழக்குடியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் ரூ. 1 இலட்சம் நிதி திரட்டப்பட்டு வீரகேரளப்பநேரி தெற்கு மடை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டா