• Thu. Dec 5th, 2024

சென்னையில் 2வது விமானநிலையம் எங்கே தெரியுமா?

ByA.Tamilselvan

Aug 1, 2022

சென்னையில் 2 வது விமானநிலையம் அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது . தற்போது அந்த இடம் குறித்து மாநிலங்களவையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை பரந்தூர் பகுதியில் 2 வது விமானநிலையம் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். பரந்தூர் ஊராட்சி ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2465 ஆகும் இவர்களில் பெண்கள் 1274 பேரும் ஆண்கள் 1191பேரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *