• Tue. Oct 3rd, 2023

போலீஸ் அரசியலில் புகுந்த புரட்சிக்காரன் “டாணாக்காரன்”

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஜெய் பீம் பட சர்ச்சை புகழ் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் டாணாக்காரன். இந்த திரைப்படம் ஓடிடி வலைத்தளமான டிஸ்னிஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஏன் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதை கடைசியாக பார்க்கலாம்.போலீஸ் கொடுமை பண்றாங்கன்னு சொல்லுவீங்க ஆனா இங்க போலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே என்ன என்ன பண்றாங்க பாருங்கனு ஒரு போலீஸ்காரரா இருந்து சினிமாவுக்குள்ள வந்துருக்குற இயக்குனர் தமிழ் படமாக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லால் , அஞ்சலி நாயர், எம் எஸ் பாஸ்கர்போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.சரி இந்த படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்தில் காவல்துறை எப்படி உருவானது என்ற ஒரு கதை கூறப்படுகிறது. அதன் பிறகு 1998 ல் கதை நிகழ்வதாக நகர்கிறது. 1982ம் ஆண்டு காவலர் பயிற்சிக்கு பலர் தேர்வு செய்யபடுகின்றனர்.ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அவர்கள் யாரும் காவலர் பயிற்சியில் பங்கு பெற முடியவில்லை. அதற்கு பிறகு வந்த ஆட்சியில் இது குறித்து பெரியதாக கண்டுகொள்ளபட வில்லை 15 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராடி காவலர் பயிற்சியில் சேர்கின்றனர்.அதாவது 28 வயதில் தேர்வு செய்யப்பட்டு 42 வயதில் பயிற்சிக்காக வருகின்றனர். இவர்களுடன் குறைந்த வயதில் உள்ளவர்களும் பயிற்சி மேற்கொள்கின்றனர். இவர்கள் எப்படி பயிற்சி முடித்தார்கள் .அந்த காவலர் பயிற்சி பள்ளியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

இந்த ஒரு வரியை வைத்து தான் மொத்த கதையினையும் தனது விறுவிறுப்பான திரைக்கதை மூலம் மிரட்டி எடுத்துள்ளார் இயக்குனர் தமிழ். இந்த படத்தில் நடிப்பு திரைவிமர்சனம் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் டாணாக்காரன் சொல்ல வந்த அரசியல் என்பதை தற்போது உள்ள சூழலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். போலீஸ் பயிற்சி பள்ளியின் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் , உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் , எதிர்த்து கேள்வி கேட்ககூடாது, சாதிய ஒடுக்குமுறை இவை அனைத்தையும் வெறும் இயக்குனராக அல்லாமல் தானும் ஒரு காவல்துறையில் இருந்து வந்தவர் தான் என்பதை நிரூபித்து உள்ளார் இயக்குனர் தமிழ்.

இடைநிலை சாதியில் இருந்து பெருமைக்காக போலீஸ் ஆக வேண்டும் என்று வந்தவர்கள் அந்த பதவியை தனது சமூகத்திற்கு மேலும் அதிகாரம் செலுத்துவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இது தென்தமிழகத்தில் பரவலாக காணக்கூடிய ஒரு நடைமுறை தான். ஆனால் லால் விக்ரம் பிரபுவிடம் சாதி குறித்து கேட்கும் போது பொது இடத்தில சாதி பெயரை சொல்ல கூடாது என்று கூறும் போது புரட்சி காரனுக்கு போலீசில் என்ன வேலை என்று கூறுவது எல்லாம் இன்னும் சாதியை ஏதோ ஒரு வகையில் வைத்து அதிகாரத்தை பிடித்து அதனை மேலும் வலுவாக்க தான் முயற்சி செய்து வருகின்றனர் என்பது தெரிகிறது.

எதற்காக போலீசாக வேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்கும் போது யாராக இருந்தாலும் அடிக்கலாம் , மாமுல் வசூல் செய்யலாம் என்று ஒருவர் கூறும் போது அதற்கு ரவுடியாகிவிடலாமே எதற்கு போலீஸ் என்று பதிலளிப்பார். அப்போது அது லைசென்ஸ் இல்லாம பண்றது , இது லைசென்ஸ் வச்சுட்டு பண்றது என்று கூறும் போது வந்த சிரிப்பலைகள் இன்னும் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது. அடுத்த ஒருவர் கூறும்போது எதற்கு எடுத்தாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம்னு சொல்றவங்கள சுட்டு தள்ளனும் அதுக்கு தான் போலீசாக வந்துருக்கேன்னு சொல்லும் போது ஒட்டு மொத்த பேரும் ஒரு கணம் அமைதியாக இருக்க இன்னும் வன்மம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இந்த காட்சியின் போது நினைவுக்கு வருவது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் வெளிவந்த போது அவரிடம் ஒரு காவல்துறை அதிகாரி கூறிய கருத்து சார் படம் சூப்பரா இருக்கு, இனிமேல் போலீஸ்காரன்னா யாருன்னு புரிஞ்சுப்பாங்கனு கூறிய போது வெற்றி மாறன் அதிர்ச்சியடைந்ததாக அவரே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

நீங்க இங்க உத்தரவுக்கு மட்டும் தான் கட்டுப்படணும் , அதிகாரி கெட்டவார்த்தையில் திட்டினாலும் கோவப்படக்கூடாது என்று நான்கு சுவர்களுக்குள் இன்று வரை நடந்து வரும் செயலை தான் இயக்குனர் தமிழ் தோலுரித்து காட்டியுள்ளார். படத்தில் இறுதியில் மூன்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருப்பார். ஒன்று விக்ரம்பிரபு ஏன் போலீசாக வேண்டும் என்ற பிளாஷ்பேக் கதை. அதில் அவருடைய தந்தை கூறும் வார்த்தை நாம பிரச்சனைனு தேடி போகும் போது நம்ம பிரச்சனையை தீர்த்து வைக்கிறதுக்கு ஒரு நல்ல போலீஸ் இருந்தா நல்லாருக்கும் என்று கூறி கொண்டிருக்கும் போதே இறப்பது. இரண்டாவது நியாப்படி வென்றவர்களை பாராட்டாமல் சக போலீசை காப்பாற்றி காவல்துறை உயர் அதிகாரி பேசும் காட்சி நானே எப்படி போலீஸ்க்கு எதிராக முடிவு எடுப்பேன்னு நீங்க எதிர்பார்க்கலாம் தப்பே நடந்தாலும் போலீஸ் பக்கம் தான் நிப்பேன் என்பது போல போலீசின் பொது புத்தியை வெட்ட வெளிச்சமாக்கி இருப்பார்.

மூன்றாவது விக்ரம்பிரபு இந்த போலீஸ் வேலை வேண்டாம் என்று உதறி தள்ளும் போது சக காவல்துறை அதிகாரி கூறும் அறிவுரை இங்க சிஸ்டம் சரி இல்ல தான் , அத நீங்க தான் மாத்தணும்.அம்பேத்கர் சொன்ன வரிகள் இங்க ஒட்டு மொத்தசிஸ்டமும் உனக்கு எதிராக தான் இருக்கு , அதிகாரத்தை பிடிக்கிறதுக்கானஅனைத்து கதவுகளையும் நான் திறந்து வைக்கிறேன்.நீங்க அதன் மூலமாக அதிகாரத்துக்கு வாங்க சிஸ்டத்தை மாத்துங்க என்று கூறும்போது அனைவர்க்கும் தன்னை அறியாமல் உடல் சிலிர்க்கும்.

சரி காவல் துறை சார்ந்து நிறைய படங்கள் வந்துள்ளது. பெருமை பேசும் படங்களாக சிங்கம்1,2,3 ,சாமி 1, 2, வேட்டையாடு விளையாடு , காக்க காக்க , போலீஸ் என்றால் என்ன என்று கொஞ்சம் நெருங்கி உண்மையை கூறிய விசாரணை , ஜெய் பீம் , காவல்துறை உங்கள் நண்பன், ரைட்டர் போன்ற படங்கள் வெளியானது.ஆனால்டாணாக்காரன் கொஞ்சம் வித்தியாசமான படம் தான்.காவல்துறைக்கு ஒரு பக்கத்தில் இருந்து அழுத்தம் வந்து கொண்டு தான் இருக்கிறது.அதனை சரி செய்யாமல் நாங்க எப்படி எல்லாம் டார்ச்சர் அனுபவிக்கிறோம் நீங்க என்னடானு அதை மக்கள் மீது காட்டுவதன் மூலம் நியாயபடுத்துவதை எப்படி ஏற்க முடியும். சமீபத்தில் கூட காவலர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களிடம் இருந்து மனுக்களை பெற்று தீர்வு காண முயற்சிப்பதாக கூறினார்.அதில் மனு கொடுக்க காத்திருந்து வரிசையை கண்டால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும் என்னென்றால் மக்களுக்கு பிரச்னை என்றால் காவல்த்துறையிடம் ஓடி வருகின்றோம்.ஆனால் அந்த காவல்துறைக்கே இப்படியா என்றால் .

இந்த சிஸ்டத்தின் கட்டமைப்பில் களையை கீழிருந்து எடுப்பதா மேலிருந்து எடுப்பதா? என்ற கேள்வி தான் எழுகிறது.தொடர்ந்து அனைத்துசம்பவத்திலும் கேள்விகள் தான் எழுந்து கொண்டிருக்கிறதே தவிர அதற்கு பதில் கிடைத்த பாடில்லை.ஆரம்பத்தில் கூறியது போல ஏன் இது திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றால் மக்களுக்கு போலீஸ் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.இதில் டாணாக்காரன் போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாக காவலர்களே கொண்டாட் தொடங்கி விட்டால் உயர் அதிகாரிகளின் உத்தரவுகள் எங்கே செல்லுபடியாகும் என்ற ஒரு உள்நோக்க அரசியல் மட்டுமே இதற்கு காரணம்.

மேலும் தமிழக அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் பள்ளிகளில் விழிப்புணர்வு படம் என்ற பெயரில் காமராஜர் படம் , பெரியார் படம் ஒளிபரப்புவது போல அனைத்து காவல்நிலையத்திலும் காவலர்களுக்கு இந்த படத்தினை போட்டு காட்ட உத்தரவு போடக்கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *