முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் 5 வருட கால விசாரணைக்கு பிறகு
தனது இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தது.மேலும் 14 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு பிறகு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் பலர் சிக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜெ.மரணத்தில் சந்தேகம் என ஓபிஎஸ் குற்றம் சாட்டியதால் 2017ல் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் சசிகலா,ஓபிஎஸ் உள்ளிட்ட 158 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றது. மேலும் 14 முறைஅவகாசத்திற்கு பிறகு அறிக்கை வெளிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.