• Mon. Sep 25th, 2023

இபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கில் 30 அல்லது 1-ந்தேதி தீர்ப்பு?

ByA.Tamilselvan

Aug 27, 2022

இபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் வரும் 30ம் தேதி அல்லது 1ம் தேதி தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்
எடப்பாடி பழனிசாமி தரப்பினர்கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறினார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், ” தனி நீதிபதியின் உத்தரவால் கட்சியே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “மிகப்பெரிய இயக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டது” என்றனர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அல்லது 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *