• Thu. Dec 5th, 2024

ஓபிஎஸ் உடன் இணைந்தார் கே.பாக்கியராஜ்

ByA.Tamilselvan

Aug 27, 2022

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட என்னால் முடிந்ததை செய்வேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய காலம் வரும் போது சந்திப்பேன். அனைவரும் ஒன்று சேர்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டனர். அதன் பிறகு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என தொடர்ச்சியாக கட்சியின் பெயர் மக்களிடம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. திருஷ்டி பரிகாரமாக ஒரு சோதனை வந்துள்ளது.மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஓ. பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் நானும் அதையே தான் கூறி வருகிறேன். மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் பலம் பெறும்.
அனைவரும் ஒன்று சேர்வார்கள் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதிமுகவில் இருந்தவன் தான். இனி முறையாக இணைந்து செயல்படுவேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும். இதை எடப்பாடி பழனிசாமி தராப்பிடம் முடிந்தால் நானும் நேரடியாக சென்று தெரிவிப்பேன் என்று கூறினார். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *