

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிக் கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் தற்போது திறக்கப்பட உள்ளன. தமிழகத்தின் சில மாவட்டங்களி மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைகூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதாரத்துறை,கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு இனி தள்ளிப்போக வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளன. நேற்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
