• Wed. Jun 7th, 2023

கண்ணில் சிக்குமா கடல் கன்னி..?

Byகாயத்ரி

Feb 8, 2022

எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க முடியாத பல விசயங்களைப்பற்றி தான் .இதில் ஒன்று தான் கடல் கன்னி.

இன்றும் இந்த பூமியில் வாழும் பல உயிரினங்கள் தினம்தோறும் புதிதாக முளைத்துக்கொண்டே தான் வருகிறது.அதில் அதியசயங்களும், ஆச்சர்யங்களும் நமக்கு கொடுக்க தவறியதே இல்லை.கடல் என்றால் நம் நினைவில் வரும் முதல் திகைப்பூட்டும் விஷயம் கடல் கன்னி. கடலில் இன்று வரை மர்மமாக இருக்கும் கடல் கன்னி பற்றி நம்ப முடியாத, விளங்கமுடியாத தகவல்கள் இதோ..

பண்டைய ஆஸ்திரியாவில் கடவுள்களின் மறு உருவமாக கருதப்பட்ட அடர்கரீஸ் எனும் பெண் தன் காதலனை தெரியாமல் கொலை செய்து விட்டதாகவும் அதற்கு தனக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக கடலில் குதித்தாகவும் பிறகு உடலின் கீழ் பகுதி மீன் போன்று மாறியதாகவும் பண்டைய காலத்தில் இருந்து கூறப்படுகிறது.

உலக புகழ் பெற்ற இத்தாலி மாலுமி கிஸ்டோப்பர் கொலாம்பஸ் 1493 ஆம் வருடம் தனது கடல் பயணத்தின் (mermaids) போது பார்த்தாகவும் அது வரலாற்றில் சொல்வது போல் அழகாக இல்லை என்றும் கூறியிருந்தார்.அதன் பின் இன்று வரை தொடர்ந்து பல மாலுமிகளும் ஆராய்சியாளர்களும் கடல் கன்னிகளை பார்த்ததாக தங்களுடைய பயணக் குறிப்புகளில் கூறுகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாபேவின் நீர்வளத்துறையின் அமைச்சர் அந்நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருந்த அணைக்கட்டு வேலைகளை நிறுத்த காரணம் அந்த பகுதியில் கடல்கன்னிகள் வேலை செய்ய விடவில்லை எனவும் மனிதர்களை தாக்கியது எனவும் கூறப்பட்டிருந்தது. பென்ஃபிரங்லின் எனும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெர்முடா கடல்பகுதியில் கடல் கன்னிகள் அதிகமாக வாழ்கிறது என்று கூறியிருக்கிறர். கடல் கன்னி குடும்பம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் பார்க்க கூடிய அளவில் எளிதாக வெளிய வருவது இல்லை. கடல் கன்னிகளை பார்பது மிகவும் அரிது என்று சில மீனவர்களும் கூறியுள்ளனர்.

இன்றும் நமக்கு புரியா புதிராக இருக்கும் கடல் கன்னியின் பயணம் எதுவரை தொடர போகிறது என்று நம்மால் கணிக்க முடியாது. இப்போது இருக்கிற தொழிலநுட்ப வளர்ச்சியில் இது ஆராய்ச்சியாளர்களால் சாத்தியம் என்று கூறலாம். பொருத்திருந்து பார்ப்போம் இந்த கடல் கன்னி நம் கண்ணில் சிக்குமா என்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *