• Fri. Jun 2nd, 2023

உடல் எடை அதிகமா இருக்கா..? அப்போ இது உங்களுக்கு தான்…

Byகாயத்ரி

Feb 8, 2022

நம்ம எல்லாருக்கும் இருக்கும் கவலை என்னனா.. நல்லா சாப்பிடனும் ஆன உடல் எடை அதிகரிக்கக்கூடாது.இது பொதுவான விஷயம் தான்.ஆன உடல் எடை ஏறிட்டா ஜிம்-க்கு போறதும் டயட் பன்றதும்-னு பல விஷயங்கள் நம்ம பண்ணுவோம்.சிம்பிளா எப்படி உடல் எடை குறைக்கலாம்..அதை பற்றி தான் இன்றைய தொகுப்பு..

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி உடல் எடையை குறைக்க வேண்டுமானால் அரிசியை முழுமையாக தவிர்க்க கூடாது. தினமும் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை ஒரு கப் அளவாவது உட்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி சாதத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. வெள்ளை சாதத்தை காட்டிலும் இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது.

காய்கறிகள்

உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த இந்திய உணவுகளில் ஒன்று தான் காய்கறிகள். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய்களில் அதிக அளவிலான கலோரிகள் உள்ளதால் அவைகளை தவிர்க்கவும்.

பயறு வகைகள்

இவ்வகை உணவுகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள ட்ரை கிளைசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.

முழு தானியங்கள்

வளமையான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பை கொண்டதாகும் முழு தானியங்கள். அதனால் கொழுப்பை நீக்க வேண்டுமானால், உங்கள் தினசரி உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளது.

ஜூஸ்

உடல் எடையை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் குறைக்க வேண்டுமானால், 3 வார காலத்திற்கு ஜூஸ் டயட்டை பின்பற்றுங்கள். உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது கீரை, உப்பு மற்றும் ஒரு கப் தயிர் கொண்டு செய்யப்படும் பச்சை ஜூஸ்.

குளிர்ச்சியான உணவுகள்

உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். வயிற்றின் உட்பூச்சிற்கு இது குளிர்ச்சியை அளிக்கும். இதில் நீர்ச்சத்து உள்ளதால் உங்கள் வயிற்றையும் நிரப்பும். உடல் எடை குறைப்பிற்கான சிறந்த காய்கறி இதுவாகும்.

மீன் வகைகள்

உடல் எடையை குறைக்க உதவும் இந்திய உணவுகளில் மீன் கண்டிப்பாக முக்கிய பங்கை வகிக்கிறது. மீனில் புரதமும் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது உதவிடும்.

ராகி மால்ட்

தென்னிந்திய மக்கள் பலராலும் பருகப்படுவது தான் ராகி மால்ட் என்ற பொதுவான எனர்ஜி பானம். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஒரு டம்ளர் ராகி மால்ட்டை இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து குடியுங்கள்.

இதையெல்லாம் கடைப்பிடத்தால் சும்மா சட்டுன்னு உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம். நீங்களும் உடல் எடை குறைக்க வோண்டுமென்றால் இதை செஞ்சா போதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *