
அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகற்பாளையம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் திரு. முருகானந்தம். இவரது முதல் மனைவியின் மகள் ராகவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது முதல் மனைவி கனிமொழி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அடுத்து, தனது மகளை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி படிக்க வைத்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக ராகவி அப்பள்ளியில் பயின்று வருகிறரர்.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு படித்துவந்த ராகவி கடந்த 9ஆம் தேதி திடீரென பள்ளியில் வாந்தி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில் அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் மைக்கேல்பட்டிக்கு சென்று தனது மகளை அழைத்துக் கொண்டு திருமானூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்துள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் மாணவியின் உடம்பில் விஷம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி, “தன்னை விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று விடுதியின் வார்டன் கூறியதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகியதால் விஷம் அறிந்தினேன்” இவ்வாறு கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பள்ளியின் வார்டன் சகாயமேரியை ( 63)
கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாணவி ராகவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. ஆனால், மாணவியின் உறவினர்கள் உடலை பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் போராட்டம் செய்தனர். மேலும், மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, மாணவியை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே வழக்கை மாற்றி பதிவு செய்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீஸ் நடந்திய விசாரணையில் மாணவி மதம் மாற்றத்துக்காக விஷம் அருந்தவில்லை என்று அவரே கூறியுள்ளார். ஆனால், மதம் மாற்றத்துக்காக தான் மாணவி விஷம் அருந்தியதாக பாஜக வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒரு சிறார் வழக்கு இதை எடுத்து பரப்பியது யார்? இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கேள்வி எழுப்பபட்டுள்ளது.
அந்த மாணவியின் வீடியோவை நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, “ஏழை விவசாயி மகள் வயது 27, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மாணவியின் வயது 17.
