• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு செயற்கை நுண்ணறிவு மாநாடு..,

ByPrabhu Sekar

Aug 19, 2026

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனித நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மாநாடு அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் தேவராஜ் மற்றும் துணை நிறுவனர் டெல்பின் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் சிறப்பு பேச்சாளராக எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நேஷனல் யுனிவர்சிட்டியின் ஹவாசா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ். சிவகுமார். ஹார்பி ஏரோஸ்பேஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் வெங்கடேசன், முல்லை அகாடமி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் விஜயசங்கர் அசோகன் மற்றும் கோபில்ட் ஒர்க் நிறுவனத்தின் நிறுவனர் அதிகாரி ஜான் ரெக்ஸ் தங்கதுரை ஆகியருடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

முன்னதாக அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராதிகா வரவேற்புரை வழங்கினார். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் மேரி மெட்லின் வயலா InfinitAI 2K26 மாநாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்

தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் சமகால வளர்ச்சிகள், சவால்கள், மற்றும் எதிர்கால வாய்ப்புகள் , Al Ideathon, Prompt Quest – Al Game Challenge, MiPhi Semiconductors குழுவினரின் அறிவுப் பரிமாற்ற அமர்வு போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இச்சிறப்பு உரைகள் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுமை, தொழில் முயற்சிகள், உலகளாவிய வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு பயனுள்ள கருத்துகள் தெரிவித்தனர்

செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டிகளில் பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்றவருக்கு பரிசுகளும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுசார் அறிவியல் துறையின் தலைவர் மகாலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்