• Sat. Jun 3rd, 2023

ஆண்டிவிளையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஆண்டிவிளையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக பொருளாளர் பி.பாலமுருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் எஸ்.ஜெஸீம் முன்னிலை வகித்தார். என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ.பேரவை செயலர் ராஜாராம், ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம், பேரூர் செயலர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், இராஜபாண்டியன், தாமரை தினேஷ், மணிகண்டன், கிளை செயலாளர்கள் சி.சுந்தரதாஸ், ஆர்.தவசிநாடார், பி.பால்பாண்டியன், பி.செல்வசார்லின், செல்வராஜ், வசந்தகுமார், எஸ்.தங்கசாமி, மாஹின் அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *