நிலநடுக்கம் ஏற்பட்ட போது அலுவலக கட்டிடம் ஒன்றில் இருந்த நபர்கள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், நபர் ஒருவர் மாற்றுத்திறனாளி ஒருவரையும் வெளியே அழைத்து வந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பொதுவாக ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் முதலில் தனது உயிரை தான் காப்பாற்றிக் கொள்ள நினைப்பார்கள்.
ஆனால் இங்கு இதற்கு மாறாக சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆம் அலுவலகம் ஒன்றில் சில ஆண்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அனைவரும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர். இதில் ஒரு நபர் மட்டும் தனக்கு முன்பாக அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி நபரையும் தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். இக்காட்சி பார்வையாளர்களின் கண்களை கண்கலங்க வைத்துள்ளது.