தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரின் ஓய்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல் இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் பற்றி ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால் ஒரு சில அமைச்சர்களின் இலாக்கள் மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது அரசு செயல்களையும் மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கர் போன்றோரின் இலாக்கள் மாற்றியமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2022 டிசம்பர் 15-ஆம் தேதி அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிதாக சேர்க்கப்பட்டதால் மேலும் சில அமைச்சர்களின் இலாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.