மதுரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான திருமொழி திருவாய்மொழி பகல்பத்து திருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவ விழாவை முன்னிட்டு அருள்மிகு வெங்கடாசலபதி பிரசன்ன சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தை தினமும் வலம் வந்து பக் ர்களுக்கு அருள்பாளித்த நிகழ்வும் , அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பெருமாள் முன்பு நாயன்மார்கள் இயற்றிய பாசுரங்கள் பாடப்படும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது . இந்நிலையில் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது . இதையொட்டி அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் மங்களவாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் பரம்பத வாசலில் எழுந்தருளினார் . அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட பெருமாளை தரிசனம் செய்தனர் .
இதனை தொடர்ந்து பெருமாள் கோவிலை வலம் வந்து, பிறகு சயன் கோல அலங்காரம் கண்டருளியும் அருள்பாலித்தார்
விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் குவிந்திருந்தனர் .இதனால் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.